வடக்கில் ரூ.488.169 மில்லியன் செலவில் 199 திட்டங்கள்! அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு

Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Oct 06, 2026 07:55 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிபம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

குறித்த அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (05.10.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

199 வேலைத்திட்டங்கள்

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்கொள்ளப்படும் சவால்கள், பணிகளை நிறைவு செய்வதில் காணப்படும் தாமதங்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு, அதன் பயன் மக்களைச் சென்றடைவது முக்கியம் என வலியுறுத்திய ஆளுநர், திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் தடைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கில் ரூ.488.169 மில்லியன் செலவில் 199 திட்டங்கள்! அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு | Vethanayahan Urged Acceleration Programs

மேலும், ஒரு விடயம் தொடர்பில் கடிதங்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காகக் காத்திருப்பதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தி, தேவையான முடிவுகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

அத்துடன், திட்டங்கள் வெறுமனே நிதி ஒதுக்கீடுகளாக நிலைத்திருக்காமல், அவை எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதார பயன்களை உருவாக்கும் வகையில் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறையிலுள்ள ஞானசார தேரர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

சிறையிலுள்ள ஞானசார தேரர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

பொகவந்தலாவையில் அதிகாலையில் திடீரென்று பற்றியெரிந்த வர்த்தக நிலையம்

பொகவந்தலாவையில் அதிகாலையில் திடீரென்று பற்றியெரிந்த வர்த்தக நிலையம்

GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US