கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட ஆடம்பர வீடு - சிக்கிய வெளிநாட்டவர்கள்
இலங்கையின் கொழும்பு புறநகர்ப் பகுதியான தலவத்துகொடவில் இணையம் வழியாகப் பணத்திற்காகச் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 8 இந்தியப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவத்துகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த குழுவினர் தங்கி, கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்த 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 8 இந்திய நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 6 கணினிகள், 39 கைபேசிகள் மற்றும் பல இதர உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்
You may like this..
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri