சுரேஷ் சலேயின் உடல் நிலை குறித்த முடிவை அறிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலை
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியுமென வைத்திய குழாம் பரிந்துரைத்துள்ளதாக சட்ட மா அதிபர் தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சுரேஷ் சலே தனது சிகிச்சையை நிறைவு செய்துவிட்டதாகவும், வைத்தியசாலையில் இருந்து வெளியேறத் தகுதியான நிலையில் சுரேஷ் சலே இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மீண்டும் சிஐடியில்
இந்தநிலையில், சுரேஷ் சலே இன்றையனம் மீண்டும் குற்றப் புலனாய்வத் திணைக்களத்தின் காவலில் எடுத்துக் கொள்ளப்படுவார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சுரேஷ் சலேவிற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் குழுவில் இடம்பெற்றுள்ள 10 வைத்தியர்களை இம்மாதம் 6ஆம் திகதி(இன்று) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த 2ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த 10 வைத்தியர்களுக்கும் விசாரணைகளுக்கு முன்னிலையாகியிருந்த நிலையில், சுரேஷ் சலேவின் தற்போதைய நிலை குறித்து நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam