மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
றாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய (6) தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ்கொடுக்கல்வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) நிதிப் பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் 'கிரிஷ்' விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan