மீண்டும் எரிபொருள் வரிசை! இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
நாட்டில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அறிவிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அமைச்சின் செயலாளரால் இன்று (06) இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பிரச்சினை தொடர்பில் நாளை (07) விசேட கலந்துரையாடல் ஒன்று வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என அகில இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி. சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாததால், மக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தல்
தற்போதைய விலையில் தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால், எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி. சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, அவற்றுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்து.
இருப்பினும், கொழும்பு உட்பட சில தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan