துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கைது
மாத்தறை, மித்தெனிய பகுதியில் குடும்பம் ஒன்றை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை உறுதிப்படுத்தினார்.
துப்பாக்கி பிரயோகம்
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, 9, 6 வயதுடைய மகன் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தந்தை சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பிள்ளைகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
மோட்டர் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் தப்பிச் சென்றிருந்தனர்.
சட்டவிரோத செயற்பாடு
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் மிக நெருக்கமானவர் என்பதுடன், அவர்களுக்கான பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.