கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த இருவர்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழ்நிலையில் இந்த படுகொலை விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றது.
குறித்த படுகொலையை மேற்கொண்ட துப்பாக்கிதாரியின் கைத்தொலைபேசி தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி
இதன் தொடர்ச்சியாக கணேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுக்கொலை செய்வதற்குச் சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனறு தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வந்தி இருவருடன் தொலைபேசி அழைப்பு
குறிப்பாக பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்த பெண் இருவருடன் தொலைபேசி அழைப்புகளை பேணியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது சமிந்து தில்ஷான் பியூமங்க கதனாராச்சி மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியுடன் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செவ்வந்தி இவ்வாறாக கொலை சம்பவம் குறித்து எத்தனை நபர்களுடன் தொடர்புகளை பேணியுள்ளார் என்பது தொடர்பில் சந்தேகம் வலுக்க ஆரமபித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam