கிண்ணியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (25.11.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மொத்தமாக 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கை
இதன்படி, குட்டிக்கராச்சிப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரிடமிருந்து 3,100 மில்லிகிராமும், பூவரசன்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராமும், மகரூப் நகரைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து 230 மில்லிகிராமும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் மூவரும் கிண்ணியா பைசல் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை சுட்டிக்காட்டி உதய கம்மன்பில வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan