நுவரெலியாவில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! மூவர் படுகாயம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா அக்கரபத்தினை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா அக்கரபத்தினை பிரதான வீதியில் என்.சி தோட்டப்பகுதியில் இன்று(12.3.2026) காலை 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
அட்டன் பிரதேசத்தில் இருந்து வியாபாரத்திற்காக அக்கரபத்தனை பிரதேசத்திற்கு சென்று கொணடிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணை
முச்சக்கர வண்டியில் சென்ற மூவரில் இருவர் சிறுசிறு காயங்களுடனும் சாரதிக்கு பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.