அம்பாறையில் மயங்கி விழுந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில்
அம்பாறை (Ampara) - பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்தச் சந்தேகத்தின் அடிப்படையில் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞனொருவரை கைது செய்யதுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சம்பவத்தில், பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 6 வயது மாணவனும் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களும் சகோதரர்கள் என்பதுடன் கைதான இளைஞனே அவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த இரு மாணவர்களும் கைதான இளைஞன் வழங்கிய போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதுடன் மயங்கி வீழ்ந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri