ஹர்ச டி சில்வா சி.ஐ.டிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவை (Harsha De Silva) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்ச டி சில்வாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) நேற்று (07.06.2024) பணிப்புரை விடுத்துள்ளார்.
புதியவிசா வழங்கும் முறை
நாடாளுமன்றத்தில் ஹர்ச டி சில்வா புதிய விசா (VFS) வழங்கும் முறை தொடர்பான சர்ச்சையின் விசாரணையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இது தொடர்பில் சி.ஐ.டிக்கு அவர் வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
