சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக படகொன்று செல்வதை அவதானித்துள்ளதுடன், அதனை சோதனையிட்ட போதே சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கும் உட்பட்ட 04 பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் கடற்படை அறிவித்துள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan