சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (30) பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூஜை வழிபாடு
இதன்போது, அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்தநிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri