வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்புக்கள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (30.10.2024) ஆரம்பமாகியுள்ளன.
வவுனியா
அந்தவகையில், வவுனியா (Vavuniya) மாவட்டத்திலும் குறித்த வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலை 8.30மணி முதல் வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
செய்தி - திலீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.
இதேவேளை, இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டம்
மேலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவில் தேர்தல் தொகுதியில் 3947 பேர் இம்முறை தபாமூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்குக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















