பணம் அச்சிடுதல் தொடர்பாக மத்திய வங்கி அளித்துள்ள விளக்கம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும்.
வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது. இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை.
இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 7 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam