இந்திய கடற்றொழிலாளர்கள் 24 பேர் விடுதலை: ஒருவருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்களில் 24 கடற்றொழிலாளர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று(04.04.2024) நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படுகுகளில் 1 படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும் மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |