நீதிமன்றம் சென்ற தமிழரசுக் கட்சி தொடர்பில் இரகசியம் உடைக்கும் முக்கியஸ்தர்
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு (Ilankai Tamil Arasu Kachchi) எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக தமிழரசுக்கட்சி தற்போது முடக்கநிலையில் உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும், தமிழரசுக்கட்சி தற்போது தமிழர் பகுதியில் இயங்குகின்றதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், கட்சி தற்போது செயற்படாமல் செயலிழந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் புதிய தெரிவில் 75 வருடங்களாக காணப்படும் பலம்பொருந்திய கட்சி யாப்பினை மீறியுள்ளதாகவும், யாப்பினை மீறி செயற்படலாம் என்று ஆலோசணை வழங்கியவர்களே தற்போது அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளமை நகைப்புக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |