ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானின் ஹோன்ஷூவின் (Honshu) கிழக்கு கடற்கரை பகுதியில் 2 ஆவது முறையாக இன்று (04) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பெரும் சேதங்கள் ஏற்படவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
சுனாமி எச்சரிக்கை
இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் சூழ்நிலையை மதிப்பீடு செய்து முன்னெச்சரிக்கையாக சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானின் அண்டை நாடான தாய்வானில் 7.4 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |