தெஹிவளை துப்பாக்கிச்சூடு: கைதான 23 வயது இளைஞர்
தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(09.08.2026) அத்துருகிரிய பொலிஸ் பிரிவின் ஹபரகட பகுதியில் உள்ள ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவல் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் ஹோமாகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam