நீதிமன்றத்தை திக்குமுக்காட வைத்த நவ்ஃபர் மௌலவி..!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாகவும், அதற்கு காரணமாக இருந்ததாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நேற்றைய தினம் (22) 15 பேர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
எனினும், அவர்கள் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பின்னர் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோதும் நடந்துகொண்ட விதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போதும், பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்படும் போதும், தங்களது அடையாளத்தை கைவிரல்களால் காட்டியுள்ளனர்.
அதேவேளை, இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் ஊடகங்களுக்கு முன்னிலையில் கூறியுள்ளனர். குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இவ்வாறு நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, “அனோஜனுக்காக குரல் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் மக்களிடையே கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்த போதிலும், சுதந்திரமாக வெளியில் நடமாடும் ஞானசார தேரர், தனது தாயாருக்காகவே தன்னால் சிறைக்குச் செல்ல முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நாட்டில் இடம்பெறும் முக்கிய விடயங்களை சுவாரஸ்யமான முறையில் மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,