கனமழையுடன் கடும் பனிமூட்டத்தில் மறைந்த நுவரெலியா - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதுடன், மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையுடன், பல பகுதிகளில் பனிமூட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கமைய, ஓஹிய பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, தொடருந்து பாதையில் சுரங்கப்பாதைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் தொடருந்து போக்குவரத்து தாமதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக தொடருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை, பலத்த காற்று மற்றும் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் போது மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி