ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் பின் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்- நீதிபதியை மிரட்டும் குற்றவாளிகள்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பு நேற்றைய தினம் (22) நாம் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேரில் ஒருவர், “நாங்கள் குற்றவாளிகள் அல்ல. ஆனாலும் சிறைக்குச் செல்கிறோம். இது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்களுக்கு தீர்ப்பு எழுதும் நீங்கள் தான் அழுதுகொண்டிருக்கிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.
200 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கக்கூடிய ஒருவரின் இந்தக் கருத்து பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, சிறையில் இருக்கும் சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய இருவர் மீதும் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கவனமும் திரும்பியுள்ளது.
100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே, அடுத்து வரும் நாட்களில் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தங்களது உறவுகளை இழந்த மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்கள் மற்றும் அநுர அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை - விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியீடு