நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியிருந்தது.
இதில் நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் 24 பிரதிவாதிகளில் 15 பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டதுடன் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த குண்டுத்தாக்குதல்களினால் 260இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அந்தவகையில் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதிபதி), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாமினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க தீர்ப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டு குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்படும்போது அவர்கள் ஒரு சிலருடைய நடத்தைகள் வித்தியாசமாக காணப்பட்டுள்ளது.
அதாவது மிலேச்சத்தனமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின் சஹ்ரான் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் தாக்குதலை மேற்கொண்ட அனைவரும் கைவிரலை மேலே உயர்திய வண்ணம் ஒரு சைகையை காட்டியிருந்தனர்.
அதேபோன்று நீதிமன்றத்தலிருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏறிய ஒருசில குற்றவாளிகள் இதே சைகையை காட்டியுள்ளனர். ஆகவே அதிலிருந்து சஹ்ரானுடைய மனநிலை இன்னும் இவர்களுக்குள்ளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி.....