நுவரெலியாவில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
டித்வா’ புயல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நுவரெலியா- ஹக்கலை பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் எதுவித அடிப்படை வசதிகளின்றி இன்றுவரை வசித்து வருகின்றனர்.
இந்த தற்காலிக கூடாரங்கள் குறிப்பாக அதிக குளிர் மற்றும் அதிக வெப்பமான காலநிலையை தாங்கும் நிலை அற்றது எனவும் , கடுமையான வானிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு திறன் அற்றது எனவும் தங்கியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள பல மைல் தூரம் சென்று வர வேண்டியுள்ளது எனவும், குளிப்பதற்கும், உடைகளை கழுவுவதற்கும் பாரிய சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவலநிலை
எமது அவலநிலை குறித்து, பலரிடம் முறையிட்டும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எமக்கு எதிர்கால மொன்று இருக்குமென்று, நாம் நினைக்க வில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கூறுகையில், மழை நேரங்களில் தற்காலிக கூடாரத்தினுள் நீர் வடிந்து வருவதாகவும் நாங்கள் தற்காலிக கூடாரங்களில் மின்சார வசதி இல்லை.
கோரிக்கை
தற்போது நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாக பல்வேறுபட்ட தோல் நோய்கள் பரவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றோம் எனவும் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.

எனவே நுவரெலியா ஹக்கல ரேந்தபொல பகுதி மக்களுக்கு தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan