இராணுவத்தின் 22 ஆவது தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு
இராணுவத்தின் 22 ஆவது தளபதியும் சிறப்புப் படைப்பிரிவின் மூத்த வீரர்களில் ஒருவருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (05.01.2024)) லெப்டினன்ட் ஜெனரல் லியனகே முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இராணுவத்தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு: குழப்பத்தில் பயணிகள்
நினைவுச் சின்னங்கள்
முன்னாள் இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது இராணுவத்தளபதி, அவரது பதவிக்காலத்தில் மேற்கொண்ட பொறுப்பான நியமனங்கள் மற்றும் இராணுவத்திற்கு வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பை ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியிடம் நினைவுகூர்ந்தார்.
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி, சந்திப்பை ஏற்பாடு செய்த இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
