ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முன்னணியின் கூட்டறிக்கை! கையெழுத்திட மறுத்த தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர்

M A Sumanthiran 22nd Amendment ITAK
By Rakesh Sep 18, 2026 06:34 AM GMT
Report

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபித்து, மக்களைத் திரட்டி எதிர்ப்பை காட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் நேற்று(17) கொழும்பில் 'ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட முன்னணி' என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்த பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றினார். 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தாமும் தமது கட்சியினரும் முழுமையாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

 22 ஆவது திருத்தம்

ஆயினும் அந்தக் கூட்ட அறிக்கையில் கையெழுத்திட அவர் மறுத்து விட்டார். ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையில் மோசமான முறையில் தலையீடு செய்து அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புக்கள் அந்தக் கூட்டறிக்கையில் ஒப்பமிடுகின்றன என்றும், அவற்றுடன் சேர்ந்து நீதிச் சுதந்திரத்தை காப்பாற்ற போராடுவது என்ற பெயரில் நடிப்பதற்குத் தான் தயார் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முன்னணியின் கூட்டறிக்கை! கையெழுத்திட மறுத்த தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் | 22Nd Amendment To The Constitution

முன்னர் பிரதம நீதியரசர்களாக இருந்த நெவில் சமரக்கோனையும், ஷிராணி பண்டாரநாயக்காவையும் பதவியிலிருந்து முறையற்ற விதத்தில் அகற்றியமை மூலம் நீதித்துறை சுதந்திரத்தில் மோசமாக தலையிட்ட தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்தை பேணுதல் என்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றார்.

அத்தகைய தரப்புகளோடு சேர்ந்து இந்த விடயத்தில் கூட்டறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தமது கட்சியின் அனுமதியைத் தான் பெற வேண்டி இருக்கும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார். ''22 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை காட்டுகின்றோம்.

முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டம்

நாடாளுமன்றத்திலும் அதனை வெளிப்படுத்தி வாக்களிப்பிலும் காட்டுவோம். ஆனால் அதற்காக நீதித்துறையில் மோசமான முறையில் தலையிட்டு, அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்திற்காகப் போராடுகின்றோம் என்று பாவனை பண்ண நாங்கள் தயார் இல்லை என்றார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முன்னணியின் கூட்டறிக்கை! கையெழுத்திட மறுத்த தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் | 22Nd Amendment To The Constitution

வரும் 24ஆம் திகதி கொழும்பில் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டத்துக்குக் கட்சி பேதமின்றி ஆதரவு திரட்டும் விதத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கின் பிற தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி

[

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US