அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி.. ரணில் தலைமையில் இடம்பெற்று வரும் தீவிர எதிர்ப்பு நடவடிக்கை
அரசியலமைப்பின் 22ஆவது சட்டமூலத் திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அந்த சட்டமூலத் திருத்தத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் முடிவடைந்து விடவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தச் சட்டமூலம்
அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இவ்வாறிருக்கையில், முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றிய முழுமையான விடயங்கள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக சட்டத்தரணிகளுடனான முக்கிய சந்திப்பொன்றையும் எதிர்க்கட்சிகள் நடத்தியதாக கூறப்படுகின்றது.