வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட திலீபனின் சிலை.. அநுர மீது பகிரங்க குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், அரசாங்கத்தின் மீதும் இலங்கை தமிழரசுக் கட்சி மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அவர், "திலீபனின் அகற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இனவாத முகம் மடடுமல்ல, தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இரட்டை முகமும் அம்பலமாகியுள்ளது.
கடந்த 18ஆம் திகதி யாழ். பொலிஸாரினால் திலீபனின் நினைவிடத்திலிருந்து ஒலிபெருக்கி சாதனம் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து, அனுமதி பெற முயற்சித்த போதும், கடுமையான முறையில் அதிகாரிகள் அணுகினர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,