பாணந்துறை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிர சோதனை - 22 வயது இளைஞர் கைது..
பாணந்துறை - மொதரவிலாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை, பாணந்துறையில் ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர் 22 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
22 வயது இளைஞர் கைது
அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 810 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகளும், 2 இரும்பு வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரும், அது தொடர்பான பொருட்களும் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி.. பதிவான வரலாற்றுச் சம்பவம்