வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கான புதிய கட்டுப்பாடு! விரைவில் நடைமுறையில்
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், அந்தந்த பீடங்களின் உயர்மட்டப் பரிந்துரைகளைப் பெறுவதைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது.
வெளிநாடு செல்லும் பிக்குகள் தமது பிரதான தேரர்கள் (ஆச்சார்ய), பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
கடுமையான நடவடிக்கை
இந்த ஒழுங்குமுறையை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறையே தற்போது மீண்டும் நடைமுறைப்டுத்தப்படவுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பிக்குகள் போன்று வேடமிட்டு நாட்டுக்குள் வருகை தந்து மதத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை அடுத்தே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை 10 ரூபாவால் உயர்வு - பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படுமா..! மல்சுரீ டி சில்வா