அமைச்சரவையில் இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டமூலம்
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று(13) மீண்டும் அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தின் உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வரைவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே மேலும் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
21வது திருத்தச் சட்டமூலம்

அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முன்மொழிவுகளை உள்ளடக்கி இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் 21வது திருத்தச் சட்ட மூலத்தை முன்வைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச

இதன்படி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை கொழும்பில் அமைச்சரவை கூடவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam