அரசியல் ஆட்டத்தால் ஆபத்தில் '21' திருத்தம்: சஜித் சுட்டிக்காட்டு (Photos)
நாட்டில் அரசியல் ஆட்டத்தால் அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் ஆபத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் மத்தும பண்டார
நீதி அமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும், ரஞ்சித் மத்தும பண்டாரவால் தனி நபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுகளால் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருக்கின்றது எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள் ஆணையிலையே தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு உண்டு சில வீரர்கள் பெருமை பேசினாலும் கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சாத்தியமான நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சாத்தியமான நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள முடியுமான நிலைப்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக அரசமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தமது அர்ப்பணிப்பை அனைத்துத் தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.













காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
