வவுனியாவில் சோக சம்பவம் - பாம்பு தீண்டி 21 வயது இளம் பெண் உயிரிழப்பு
வவுனியா - நெடுங்கேணிப் பகுதியில் பாம்பு தீண்டியதில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(25.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, நெடுங்கேணி, சின்னப் பூவரசங்குளம் பகுதியில் கடந்த வாரம் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாம்பு தீண்டி உயிரிழப்பு
பாம்பு தீண்டிய குறித்த பெண்ணை வீட்டிலிருந்து நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. அந்த வீதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதால், அந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நெடுங்கேணி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்களுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், சின்னப் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கவிராஜ் ரித்திக்கா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.