யாழில் கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று(25.11.2026) எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் திருவலைக் கட்டையால் தலையில் அடித்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவியான செல்வகுமார் சரண்யாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.