2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிரிக்கட் போட்டிகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு
எதிர்வரும் 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிரிக்கட் போட்டிகளும் நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டியில் (LA28) கிரிக்கெட் நடைபெறும் மைதானமாக தெற்கு கெலிஃபோர்னியாவின் போமோனாவிலுள்ள ஃபேர்கிரவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
128 ஆண்டுகளுக்கு பிறகு, கிரிக்கெட் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பிடிக்கின்றது. இத்தகவலின்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளன.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மைதான அறிவிப்பை வரவேற்று, ஒலிம்பிக் போட்டிக்கான தயார் பணியில் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் (IOC) இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடைபெறும் மைதானம் உறுதிசெய்யப்பட்டதை வரவேற்கிறோம். இது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் திரும்புவதற்கான மிக முக்கியமான கட்டமாகும் என சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகளாவிய அளவில் பிரபலமான விளையாட்டு என்றாலும், அதைப் புதிய ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் அரிய வாய்ப்பாக இது அமையும். அதிலும் குறிப்பாக, வேகமான மற்றும் கண்கவர் முறையில் நடைபெறும் T20 வடிவமைப்பு மூலம், கிரிக்கெட் அதிகமான புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் எனக்கு உறுதியுள்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சார்பில் LA28 மற்றும் IOC-க்கு இதற்கான முழுப் பொருத்தமான ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், LA28 ஐ முன்னோக்கி மிகச் சிறப்பாக தயார் செய்ய உலகின் அனைத்து சர்வதேச கிரிக்கட் பேரவை உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் கடைசியாக இடம்பெற்றது. அதன் பின்னர், 2023-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டது.
T20 வடிவமைப்பு, கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான முக்கிய கருவியாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.
இதற்காக, பல்வேறு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளிலும் T20 கிரிக்கெட் இடம்பிடித்து வருகிறது. 2010, 2014, மற்றும் 2023-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் T20 கிரிக்கெட் இடம்பெற்றது.
அதேபோல், 2022 பற்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியிலும் பெண்கள் T20 கிரிக்கெட் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam
