தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம், காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், நெடுந்தீவு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இறுதி முடிவுகள்
அத்துடன், வேலணை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
மேலும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம், நல்லூர் பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
யாழ். நல்லூர் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழரசுக் கட்சி 5,576 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 986 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2,095 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 2,820 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 4,921 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். ஊர்காவற்துறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். ஊர்காவற்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1.371 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 1,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சி 7,490 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஈபிடிபி 924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி 3,892 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. சுயேட்சை குழு 1,363 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 1,115 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4471 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சி 9,216 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 560 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 5,171 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 3,956 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். பருத்தித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,045 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சி 1,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 213 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 665 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேட்சை குழு 355 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். காரைநகர் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
சுயேட்சைக் குழு ஒன்று 1350 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1044 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 909 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 604 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ் - வலிகாமம் வடக்கு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ,தமிழரசுக் கட்சி 7233 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3619 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2261 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 604 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். நெடுந்தீவு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 974 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈபிடிபி 752 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 158 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 6896 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 4159 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 3732 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வடமராட்சி பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 6995 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 4255 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 3329 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி கட்சி 1165 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 9881வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 7908 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 5047 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 4543 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
சுயேட்சைக் குழு ஒன்று 1910 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். வேலணை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தமிழரசுக் கட்சி 2673 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1840 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 1313 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 976 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2959 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சி 2594 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1445 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 738 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
ஈபிடிபி 535 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தமிழரசுக் கட்சி 10370 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 9124 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 7702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஈபிடிபி 3567 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 3076 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.
யாழ். வல்வெட்டித்துறை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
தமிழரசுக் கட்சி 1299 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 676 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
ஈபிடிபி 90 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணி 76 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
