ஜனவரியில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை
2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குள் இரண்டு இலட்சத்தி ஐம்பத்தி மூன்றாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜனவரி மாதமொன்றுக்குள் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னதாக ஜனவரி மாதமொன்றுக்குள் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது.
சுற்றுலாப் பயணிகள்
குறித்த 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இரண்டு லட்சத்தி முப்பத்தி எட்டாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் வருடமொன்றுக்குள் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த வருடமாகவும் 2018ம் ஆண்டு பதிவாகியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
வேலைத்திட்டங்கள்
அதன் பின்னர் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், கோட்டாபய ஆட்சியில் நாடு எதிர்கொண்ட வங்குரோத்து நிலை என்பன காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்திருந்தது.

அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் வாயிலாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan