மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை : இரத்த கறையுடன் தாய் கைது
இரத்த கறையுடன் தாய் கைது
மகளை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரின் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை தாய் மற்றும் அவரது 36 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்து தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எழுதிய கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்ட நிலையில், அதில் இரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்
கைது செய்யப்பட்ட 76 வயதான தாய் மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்க்க முயற்சித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதல் இணைப்பு
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொடூரமாக கொலை
கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதில் இந்த கொலையை தான் தான் செய்ததாக, பெண்ணின் தாயின் கையெழுத்தில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான சகோதரனுக்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அந்த கடிதம் எழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
