உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 12ஆம் திதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை இணையம் மூலம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள்திருத்த பெறுபேறுகள்
அதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி காலக்கெடு நீடிப்புக்கமைய விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சலுகை காலம் எக்காரணம் கொண்டும் மேலும் நீடிக்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



