மகிந்தவின் இல்லத்தை எரித்தவர்கள் இரக்கத்திற்கு தகுதியானவர்கள் அல்ல! சுப்ரமணியன் சுவாமி ஆவேசம் (Photo)
பிரதமராக இருந்த மகிந்தவின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால் அதற்கு காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால், அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல.
எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Burning down the residences even of the Prime Minister, shooting dead MPs by mobs means rioters don’t deserve any mercy. We cannot allow another Libya in our neighbourhood.
— Subramanian Swamy (@Swamy39) May 11, 2022
இதேவேளை இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென அவர் அண்மையில் கோரிக்யொன்றை முன்வைத்திருந்தார்.
அத்துடன் சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவதும்ன சுட்டிக்காட்டத்தக்கது.
May you like this Video