நுரையீரல் புற்றுநோயால் 2000இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 39,658 புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 2,142 பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயைக் கண்டறிவதன் மூலம்
இதில் 1,521 பேர் ஆண்கள், 621 பேர் பெண்கள் ஆவர். ஆண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆண்களிடையே பதிவாகும் மொத்த புற்றுநோய்களில் சுமார் 12 வீதம் நுரையீரல் புற்றுநோயாகும்.
ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் சிகிச்சை வெற்றி மற்றும் உயிர் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan