சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையின் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது நிர்வாக அமைச்சு உறுதி செய்துள்ளது.
சுதந்திர தின நிகழ்விற்காக நிதி ஒதுக்கீடு
இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செலவுகளை குறைக்க முயற்சிக்கப்படும் எனவும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார போபகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
