மகிந்தவின் நெருங்கிய சகாவின் மரணத்தில் தொடரும் மர்மம் - அருகில் சிக்கிய பொருட்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த இடத்தில் இருந்து 20 மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறுமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்குள் கபில சந்திரசேன சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்து கிடந்த இடத்தில் இருந்து, அடையாளம் தெரியாத 2 வகையான மருந்து மாத்திரைகள் காணப்பட்டுள்ளன.
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
நீதவான் உத்தரவு
அதில் ஒரு வகையில் 9 மாத்திரைகளும் மற்றைய வகையில் 11 மாத்திரைகளும் இருந்ததாகவும் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சிசிடிவி காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணை எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்திரசேனவுக்கு எதிராக பிடியாணை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தொடர்பு இருப்பதாக, கபில சந்திரசேன சாட்சியம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் போலியான நபர்களை முன்வைத்து பிணையில் வெளியில் வந்த கபில சந்திரசேனவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே அவர் கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri