பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை சுரேஷ் சலேவை தடுப்புகாவலில் வைக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டுள்ள அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
வழக்கு விசாரணை
இதற்கமைய, சுரேஷ் சலே மீதான வழக்கு இன்று பிற்பகல் (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this..
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri