நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்
மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் நேற்று இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மீல்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள், நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வேனில் வந்த ஆயுததாரிகள் விபத்தை ஏற்படுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு பக்க வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வேனை தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சூட்டுக்கான காரணம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதீஷான் மற்றும் பசிந்து தாருக என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 10 மணி நேரம் முன்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
