சிறைச்சாலைக்குள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குறித்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் வெளியே இருந்து உணவை பெற கோரிக்கைகளை முன்வைக்கலாம்.
கோரிக்கை
கோரிக்கையை சம்பந்தப்பட்ட சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, தேசபந்து தென்னகோனும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று அவர் தும்பர சிறைச்சாலைக்கு வெளியே இருந்து உணவு பெற அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
