பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன்(கருணா), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (22) கைச்சாத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்த உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதனையடுத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் குறித்த தரப்பினர் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan