நீர்கொழும்பில் பெருந்தொகையான பணத்துடன் சிக்கிய இரு இளைஞர்கள்..! விசாரணையில் வெளியான ரகசியம்
இணையவழி பணப்பரிமாற்ற முறைகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, நீர்கொழும்பு - கட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பெருந்தொகைப் பணம்
கைது செய்யப்பட்டவர்கள், கல்கிஸ்ஸை மற்றும் உடுகம்பலவைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 1 கிலோகிராம் 34 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 3,51,200 ரூபா பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan