2 யூதப் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு: கொந்தளித்த ட்ரூடோ
கனடா - மான்ட்ரியலில் இரண்டு யூதப் பள்ளிகள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியமைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக கண்டித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவாக யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கனடாவின் மான்ட்ரியலில் உள்ள 2 யூத பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஊழியர்கள் 9ஆம் திகதி காலையில் வந்தபோது, பள்ளி கட்டிடத்தின் வெளிப்புறத்தில் தோட்டா துளைகளைக் கண்டுபிடித்தனர்.

எனினும், இது நடந்தபோது உள்ளே யாரும் இருக்கவில்லை எனவும், ஒரே இரவில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'மான்ட்ரீலில் உள்ள யூதப் பள்ளிகளில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் திகிலூட்டுகின்றன. இந்த வன்முறைச் செயல்களை நான் மிகக் கடுமையான கண்டிக்கிறேன்.

மேலும் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.இந்த வெறுப்பு கனடாவில் இடமில்லை, நாம் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam