கனரக வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்
கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று(4.9.2026) முற்பகல் கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri